×

கடும் வறட்சியால் விளைச்சல் குறைவு தக்காளி விலை கிடுகிடு உயர்வு

கரூர், நவ. 1: கரூரில் தக்காளி விலை உயர்ந்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் கடும் வறட்சி காரணமாக காய்கறி விளைச்சல் குறைந்துள்ளது. மலைக் காய்கறிகள் ஊட்டியில் இருந்தும், பிற காய்கறிகள் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் இருந்தும் கரூருக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. ஓசூர் அருகே உள்ள ராயக்கோட்டையில் உள்ள தக்காளி மார்க்கெட்டில் இருந்து தக்காளி விற்பனைக்காக வருகிறது.
நாட்டுக் காய்கறிகள் தக்காளி போன்றவை கடும் விலை உயர்வு ஏற்பட்டு வந்த நிலையில் தக்காளியின் விலை குறைந்து வந்தது. கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை உழவர்சந்தைகளில் விற்பனையாகி வந்த நிலையில் தற்போது தக்காளியின் விலை ஏறுமுகத்தில் உள்ளது. உழவர்சந்தைகளில் ரூ.28 முதல் ரூ.30 முதல் விற்பனை செய்யப்படுகிறது, கடைகளில் ரூ.35 முதல் ரூ.40 வரை விற்பனை செய்கின்றனர். தக்காளி விலை உயர்ந்து வருவதால் உணவகங்களில் தக்காளி பயன்பாடு குறைந்து வருகிறது.

எலுமிச்சை பழம் விலை கடந்த மாதம் ரூ.140 வரை விற்பனையாகி வந்தது. தற்போது எலுமிச்சை விலை குறைந்து வருகிறது. நேற்று உழவர்சந்தைகளில் ரூ.80க்கு விற்பனையானது. மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன் போராட்டம் பெரும்பாலான வயல்களில் நோய்கள் தாக்கி உள்ளதால் மகசூல் குறையும் என்றும் விவசாயிகள் கூறுகின்றனர். தற்போது தனியார் மருந்து கடைகளில் இருந்து மருந்துகள் பெற்று குலைநோய், யானைக்கொம்பன், இலை சுருட்டு, வெள்ளைமுறியான் போன்ற நோய்களில் இருந்து நெற்பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் மருந்துகள் அடித்து வருகின்றனர்.

Tags : drought ,
× RELATED வறட்சியை நோக்கி நகரும் பெங்களூரு.. தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் அவதி!!