×

விவசாயத்துக்கு தேவையான இடுபொருட்களை தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டத்தில் வலியுறுத்தல்

அரியலூர், நவ. 1: அரியலூர் மாவட்டத்தில் விவசாயத்துக்கு தேவையான இடுப்பொருட்களை தட்டுப்பாடு இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.அரியலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர், அரியலூர் மாவட்டக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம் தலைமை வகித்தார். கூட்டத்தில் ஆண்டிமடம் அருகே அகரத்தில் மனநிலை பாதித்த சிவசங்கரியை பாலியல் வல்லுறவு செய்து கர்ப்பமாக்கிய அதிமுக பிரமுகரை கைது செய்ய கேட்டு போராடிய ஜனநாயக மாதர் சங்கம் போராட்டத்திற்கு அனுமதி வழங்க மறுத்ததை கண்டிப்பது. குற்றவாளிக்கு துணை போகும் காவல்துறை மீது நடவடிக்கை எடுத்து குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் விவசாயத்துக்கு தேவையான இருப்பொருள் உரம், யூரியா தட்டுப்பாடு இல்லாமல் உடனடியாக விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரியலூர் நகரில் அண்ணா நகர், அழகப்பா நகர் பகுதியில் நிலத்தை மோசடியாக தனி நபர்களுக்கு பட்டா வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நில உரிமையாளரிடம் நிலத்தை ஒப்படைக்க வேண்டுமென தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலக்குழு உறுப்பினர் சின்னதுரை, மாவட்ட செயலாளர் மணிவேல் உள்ளி–்ட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : meeting ,Marxist Communist Party ,
× RELATED பாஜக ஆலோசனை கூட்டம்