×

மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல் கட்டுப்பாடு வேளாண் இயக்குனர் ஆய்வு

அரியலூர், நவ. 1: திருமானூர் வட்டாரத்தில் மக்காச்சோள பயிரில் படைப்புழு கட்டுப்பாட்டுக்காக ஒட்டுமொத்த பரப்பில் பயிர் பாதுகாப்பு மருந்து தெளித்தல் மற்றும் வேளாண்மைத்துறை சார்ந்த பணிகள் குறித்து வேளாண்மை கூடுதல் இயக்குனர் சங்கரலிங்கம் ஆய்வு செய்தார்.அப்போது சாத்தமங்கலம் கிராமத்தில் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த பயிர் பாதுகாப்பு மருந்து தெளிக்கும் பணியை பார்வையிட்டார். அதில் மருந்து தெளிக்கும்போது மருந்து தெளிப்போர் உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றுமாறு அறிவுரை வழங்கினார்.மேலும் கீழகாவட்டாங்குறிச்சியில் நேரடி நெல் விதைப்பு செய்த மணிவேல் வயல், க.மேட்டுத்தெருவில் நாகரான் அமைத்திருந்த கரும்பு நாற்றாங்காலுக்கான பசுமைகுடில் மற்றும் செம்பியக்குடி கிராமத்தில் பெல்வின் அமைத்திருந்த இயந்திர நடவுக்கான தட்டு நாற்றாங்காலை பார்வையிட்டார்.

இதைதொடர்ந்து கீழப்பழூர் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் அனைத்து அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் ஒரு வாரத்துக்குள் மக்காச்சோளத்தில் படைப்புழுவை கட்டுப்படுத்த மருந்து தெளிக்க அறிவுறுத்தினார்.ஆய்வின்போது அரியலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, வேளாண்மை துணை இயக்குனர் பழனிசாமி, வேளாண்மை தர கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் சுரேஷ் உடனிருந்தனர்.



Tags : Maize ,
× RELATED மக்காச்சோளத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு குறித்து ஆய்வு