×

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு

பெரம்பலூர், நவ.1:தேசிய ஒற்றுமை நாள் உறுதி மொ ழி மற்றும் ஊழல் எதிர்ப்பு வார உறுதிமொழி.கலெக் டர்(பொ) இராஜேந்திரன் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் ஏற்றனர்.ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31ம் தேதி தேசிய ஒற்றுமை நாள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் 2019 அக்டோபர் 28ம் தேதி முதல் நவம்பர் 2ம்தேதி வரை ஊழல் எதிர்ப்பு வார தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதனை முன்னிட்டு அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்ற தேசிய ஒற்றுமை நாள் உறு திமொழி மற்றும் ஊழல் எதிர்ப்பு வார உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலு வலகத்தில் மாவட்டக் கலெ க்டர்(பொ) ராஜேந்திரன் தலைமையில் நேற்று (31ம்தேதி) பெரம்பலூர் கலெக்டர் அலுவ லகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தேசிய ஒற்றுமை நாள் உறுதி மொழியினையும், அத னைத் தொடர்ந்து, ஊழல் எதிர்ப்பு வார உறுதிமொழியினையும் கலெக்டர்(பொ) (பொ) ராஜேந்திரன் வாசிக்க அனைத்துத்துறை அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொ) ராஜராஜன், (வளர்ச்சி) ராம், மாவட்ட ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மஞ்சுளா, சமூக நல அலுவலர் ரேவதி உள்ளிட்ட அனைத் துத்துறை அரசு அலுவலர் கள் பலர் கலந்து கொண்டனர்.


Tags : Office ,Perambalur Collector ,
× RELATED திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு