×

தோகைமலை பகுதியில் சம்பா நெல் சாகுபடிக்கு மருந்து தெளிக்கும் பணி தீவிரம்

தோகைமலை, நவ. 1: கரூர் மாவட்டம் தோகைமலை பகுதிகளில் கிணற்றுப் பாசனம் மற்றும் ஆற்றுப் பாசனங்களில் சம்பா சாகுபடி செய்துள்ளனர்.
தோகைமலை ஒன்றியத்தில் நெய்தலூர், சேப்ளாப்பட்டி, முதலைப்பட்டி மற்றும் குளித்தலை பகுதிகள், நங்கவரம், நச்சலூர், குறிச்சி, சூரியனூர் போன்ற பகுதிகளில் ஆற்றுப் பாசனமாகவும், கள்ளை, தளிஞ்சி, தோகைமலை, நாகனூர், கழுகூர், ஆர்ச்சம்பட்டி, ஆர்டிமலை, புழுதேரி, வடசோp, ஆலத்தூர், பாதிரிப்பட்டி உட்பட 17 ஊராட்சிகள் கிணறு, ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் குளத்துப்பாசன பகுதிகளாகவும் இருந்து வருகிறது. தற்பொழுது இந்த ஆண்டு பருவமழை கணிசமான அளவில் பெய்ததால் கட்டளை மேட்டு வாய்க்கால் பகுதியில் இருந்து பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதிகளுக்கு போதுமானதாக இல்லாததால் பெரும்பாலான விவசாயிகள் காலம் கடந்து பயிர் நடவு செய்தனர். இதில் இந்த ஆண்டு சம்பா சாகுபடியில் பிபிடி ரகமான ஆந்திரா பொன்னி, கோ 51, ஆடுதுறை 49, டிகேஎம் 13 மற்றும் கம்பா மசூர் போன்ற பல்வேறு ரகங்களையும் நடவு செய்தனர். பிபிடி ரகமான ஆந்திரா பொன்னி பயிர்களுக்கு அதிகமான நோய் தாக்கம் ஏற்படுவதால் பிபிடி ரகத்தை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வேளாண் துறை நிறுத்தி விட்டதாக கூறுகின்றனர். இருந்த போதும் பிபிடி ரகமான ஆந்திரா பொன்னி பயிர்களையே விவசாயிகள் அதிகமாக விரும்பி வருவதாக வேளாண்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கோ 51, ஆடுதுறை 49, டிகேஎம் 13 மற்றும் கம்பா மசூர் போன்ற ரக விதைகளை புரட்டாசி மாதம் இறுதிக்குள் 15 அல்லது 20 நாள் பயிர்களை நடவு செய்தால் குலைநோய், யானைக்கொம்பன், இலை சுருட்டு போன்ற நோய்கள் தாக்காது என விவசாயிகள் தொpவித்து இருந்தனர். ஆனால் போதுமான மழை இல்லாததால் பருவம் தவறி 30 நாள் பயிர்களை புரட்டாசி மாதத்திற்கு பிறகு பெரும்பாலான விவசாயிகள் தங்களது வயல்களில் நடவு செய்தனர். இதனால் குலைநோய், யானைக்கொம்பன், இலை சுருட்டு, வெள்ளைமுறியான் போன்ற நோய்கள் தாக்கி உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். பெரும்பாலான வயல்களில் மேற்படி நோய்கள் தாக்கி உள்ளதால் மகசூல் குறையும் என்றும் விவசாயிகள் கூறுகின்றனர். தற்போது தனியார் மருந்து கடைகளில் இருந்து மருந்துகள் பெற்று குலைநோய், யானைக்கொம்பன், இலை சுருட்டு, வெள்ளைமுறியான் போன்ற நோய்களில் இருந்து நெற்பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் மருந்துகள் அடித்து வருகின்றனர்.

Tags : area ,Dohaimalai ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...