×

பெரம்பலூரில் 430 மி.மீ., மழை பதிவு

பெரம்பலூர், நவ.1: பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது வடகிழக்குப் பரு வமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அதிலும் குறிப்பாக குமரியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை புயலாக உருவெடுத்திருப்பதால், அதன் எதிரொலியாக 29,30 ஆகிய 2நாட்களும் காலை மாலையென மாறிமாறி அடைமழையாக பெய்து வருகிறது.பெரம்பலூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 861மி.மீ ஆகும். இதில் நடப் பாண்டு 2019ல் ஜனவரி 1ம் தேதி தொடங்கி அக்டோபர் 29ம்தேதி வரை 580.18மிமீ மழை பெய்துள்ளது. இதில் குறிப்பாக அக்டோபர் 15ம் தேதிக்குப் பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், ஆரம்பமே அமர்க்களமாக 16ம் தேதி 217மிமீ, 17ம்தேதி 169மிமீ என மழை பெய்தது. பிறகு 20ம்தேதி 40மிமீ, 21ம்தேதி 50மிமீ, 23ம்தேதி 379மிமீ எனப் பெய்தது.இந்நிலையில் 29ம்தேதி கன்னியாகுமரியில் குறைந்த காற்ற ழுத்தத் தாழ்வுநிலை ஏற்பட்டதால் பெரம்பலூர் உள்ளி ட்ட மத்திய மாவட்டங்கள் வரை கனமழை பெய்தது.இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில், செட்டிக்குளம் 4 மிமீ, பாடாலூர் 27மிமீ, அக ரம்சீகூர் 35மிமீ, லெப்பைக் குடிகாடு 40மிமீ, புதுவேட்டக் குடி 41மிமீ, பெரம்பலூர் 58 மிமீ, எறையூர் 38மிமீ, கிருஷ்ணாபுரம் 59மிமீ, தழுதா ழை 53மிமீ, வி.களத்தூர் 30 மிமீ, வேப்பந்தட்டை 45மிமீ என மாவட்ட அளவில் 430 மிமீ மழை, அதாவது சராச ரியாக 39.09மிமீ மழை கொ ட்டித்தீர்த்தது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப் பட்ட நிலையில், நேற்று (30ம்தேதி) 2வது நாளாக காலை 11மணி முதல் விட்டுவிட்டுப் பெய்தமழை, மாலை 4மணிமுதல் 5.30மணி வரை அசராமல் கொட்டித் தீர்த்தது. இதனால் ஏரி, குளங்களுக்கு வரத்து வாய்க்கால்களில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்லும் அளவுக்கு கல்லாறு, காட்டாறு உள்ளிட்ட சிற்றாறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் நடப்பா ண்டு ஆண்டு சராசரி மழை யளவை எட்டுமென எதிர் பார்க்கப்படுகிறது.
கடந்த செப்டம்பர்மாத இறுதியில் பெய்த கனமழையால் பெரம்பலூர் மாவட்ட த்தில் பொதுப்பணித்துறை யின் நீர்வள ஆதார அமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள 73 ஏரிகளில் கீழப்பெரம்பலூர், ஒகளூர் ஆகிய 2 ஏரிகள் 100 சதவீத கொள்ளளவை எட்டியதால் நிரம்பி வழிந்தன.3ஏரிகள் 80 சதவீ தத்திற்கு மேலும், 15ஏரிகள் 50 சதவீதத்திற்கு மேலும் நிரம்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி