×

விடுமுறை நாளில் இயங்கிய பள்ளிகள்

குமரி மாவட்டத்தில் மழை காரணமாக நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும் பல பள்ளி, கல்லூரிகள் திறந்து செயல்பட்டன. பொறியியல் கல்லூரிகள் பல வழக்கம்போல் செயல்பட்டன. காலையில் கல்லூரி பஸ்களில் மாணவ மாணவியர் அழைத்து செல்லப்பட்டனர். சில மெட்ரிக் பள்ளிகள் 10, 11, 12ம் வகுப்புகள் வழக்கம்போல் நடைபெறும் என்றும் அறிவித்து வகுப்புகளை தொடர்ந்து செயல்படுத்தப்பட்டன. அதே வேளையில் மாவட்ட கலெக்டரின் உத்தரவை மீறி திறந்து செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

Tags : Schools ,holiday ,
× RELATED பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்...