×

பெரம்பலூர் மாவட்டத்திற்கான 1,500 டன் யூரியா கேரளா மாநிலத்திற்கு விற்று மோசடி

பெரம்பலூர், நவ.1: பெரம்பலூர் மாவட்டத்திற்கான 1500 டன் யூரியா கேரளா மாநிலத்திற்கு விற்பனை செய்து மோசடி நடந்துள்ளது என விவசாய தொழிலாளர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க் கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட வேளாண் மைத்துறை இணைஇயக் குநர் கணேசன், துணை இயக்குநர் ராஜசேகரன், பெரம்பலூர் மாவட்ட கூட்டு றவு சங்கங்களின் இணை ப்பதிவாளர் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் தேவநாதன் தலை மை வகித்தார். கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வேப்பந்தட்டை ஜெயராமன் பேசியதாவது :பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து தனியார் உரக்கடைகளிலும் ரூ.266க்கு விற்கவேண்டிய யூரியா உரம் ஒரு மூட்டையை ரூ.450முதல் ரூ.500வரை விலை வைத்து கூடுதல் விலைக்கு விற்கிறார்கள். இதுகுறித்து வேளாண்மை த்துறை அதிகாரிகள் குழு அமைத்து ரெய்டு நடத்தி நிர்ணயிக்கப்பட்ட விலை யைக்காட்டிலும் கூடுதல் விலை வைத்து விற்கும் கடைகளின் விற்பனை உரி மத்தை ரத்துசெய்ய வேண் டும்.

மாவட்ட அளவில் ரூ.1 லட்சம், ரூ.1.25லட்சம் என பல இடங்களில் தடுப்பணைகள் கட்டும் பணிகள் அதிகம் நடக்கிறது. அதில் தவறு நடக்காமல் கண்காணிக்க வேண்டும். ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவ, மாணவிகள் பயிலும் அர சுக்கல்லூரி உள்ள வேப்பந்தட்டை பஸ் நிறுத்தத்தில் மகளிருக்கான கழிப்பிட வசதி இல்லை. விரைந்து யூனியன் அலுவலகம் அரு கே மகளிர் கழிப்பறை கட்டி த்தர வேண்டும். மாவட்ட அளவில் ஏற்கனவே ஆயிர க்கணக்கில் கட்டப்பட்ட தனிநபர் கழிப்பறைகள் குறைந்த நிதியில் கட்டப்பட் டதால் தரமற்று பயன்பாடின்றிக் கிடக்கிறது. அதற்காக ரூ.12 ஆயிரத்திற்கு பதிலாக ரூ.25ஆயிரமென கூடுதல் நிதி ஒதுக்கி தனி நபர் கழிப்பறைகள் தரமாக கட்டித்தர வேண்டும் எனத் தெரிவித்தார்.தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கை.களத்தூர் ராஜூ பேசியதாவது:பெரம்பலூர் மாவட்டத்தில் மழையின் காரணமாக கடந்த 1 மாத மாக வைரஸ் காய்ச்சல், டெங்குக் காய் ச்சல் பாதித்துள்ளது. குறிப்பாக கை.களத்தூர் ஊரா ட்சி கை.களத்தூர், பாதாங்கி, சிறுநிலா, பெருநிலா, காந்தி நகர் கிராமங்களில் பெரும்பாலான பொதுமக்களுக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருந்ததால், சிஎஸ் ஐ பள்ளி, சமுதாயக்கூடங் களில், 3வாரங்களாக சுகா தாரத்துறை சார்பாக முகா மிட்டு பரிசோதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் உயிரிழப்பு தடுக்கப் பட்டுள்ளது. ஆனால் ஒரே யொரு டாக்டர் மட்டுமே பணிபுரிந்து வருகிறார். அப்பகுதியில் கூடுதலாக டாக்டர்களை நியிமிக்க வேண்டும். விவசாயிகள் கொடுக்கும் மனுக்கள் தொ டர்பாக குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முறையாக பதில்தரவேண்டும். அதை விடுத்து உங்கள் கோரிக் கை ஏற்பு, ஏற்கப்பட வில் லை என பதில் தருவது கண்டிக்கத்தக்கது எனத் தெரிவித்தார்.

அகிலஇந்திய விவசாயத் தொழிலாளர் கள் சங்க மாவட்ட செய லாளர் ரமேஷ் பேசியதாவது :பருத்தி, மக்காச் சோளப் பயிர்களுக்காக இறக்குமதி செய்யப்பட்டு ள்ள மிகக்குறைந்த உரம் யானைக்கு சோளப்பொறி தருவதுபோல் உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தி ற்கு வழங்க வேண்டிய 1500 டன் யூரியா மோசடியாக வெளி மாநிலமான கேரளாவிற்கு விற்கப்பட்டுள்ளது.ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரை பெரம்பலூர் மாவட்டத்திற்காகப் பெற்று ள்ள யூரியா குறித்து வெள் ளை அறிக்கை வெளியிடப் படவேண்டும். கோடிக் கண க்கில் மோசடிநடந்துள்ளது. உரத்தட்டுப்பாடு செயற்கை யாக உருவாக்கப்பட்டது. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் பெரும்புள்ளிகள் சிக்கியுள்ளனர். எங்கள் அடிவயிறு எரிகிறது. முழுமையான வெள்ளை அறிக்கையை வேளாண் மைத் துறை வெளியிட வேண்டும்.இல்லாவிட்டால் நான் வெள்ளை அறிக்கை யை வெளியிடுவேன். இந் தத் தகவலை நான் வெளி யிட்டால் எனது உயிருக்கு ஆப த்தும் உள்ளது. மின்க ட்டணம் பலமடங்கு அதிக ரித் துள்ளது. குறித்த கால த்தில் பணம் கட்டாவிட்டால் அபராதம் வசூலிக்கப் படு கிறது. ஆனால் பகலிலும் இரவிலும் பலமணி நேரங் கள் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதற்கு வாரிய முடிவுகளின்படி மின்சார வாரியம் துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை கணக்கிட்டு மீண்டும் வழங்க வேண் டும். இதற்காக படுத்துக் கொண்டு வேலை செய்யுங் கள், பறந்துகொண்டு வே லை செய்யுங்கள், ஆனால் எங்களுக்கு பிடிபட்ட மின் சாரத்தை வாரிய விதிப்படி திருப்பித் தர வேண்டும் எனத் தெரிவித்தார்.

கூட்டத்தில் தமிழக விவசா யிகள் சங்க மாநிலச் செயலாளர் ராஜாசிதம்பரம் பேசியதாவது :பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணி த்துறையின் நீர்வள ஆதார அமைப்பின் சார்பாக 14 ஏரி களும், மாவட்ட ஊரக வளர் ச்சி முகமைத் திட்டத்தின் சார்பாக 500க்கும் மேற்பட்ட குளங்களும், ஊரணிகளு ம் என ரூ.9 கோடியே, 77லட் சம் மதிப்பில் குடி மராமத்து ப் பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.ஆனால் இப்ப ணிகள் குறித்து சம்மந்தப்ப ட்ட ஊராட்சியின் கிராம சபைக் கூட்டத்தில் தீர்மா னம் நிறைவேற்றித் தரப்பட வில்லை. மேலும் திட்டப் பணிகள் நடந்த ஏரி, குளத் தின் முன்பு திட்ட மதிப்பீடு குறித்த பெயர்ப் பலகை வைக்கப்படவில்லை. இத னால் திட்டம் எவ்வளவு மதிப்பிற்கு நடந்துள்ளது என்ற விபரமே தெரியவில்லை எனத் தெரிவித்தார்.கூட்டத்தில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் செல்லதுரை, தமிழ்நாடு கரும்பு விவசா யிகள் சங்க மாநில துணை ச் செயலாளர் ஏ.கே. இரா ஜேந்திரன், தமிழக விவசா யிகள் கட்சி மாநிலத் தலை வர் ராமராஜ், தமிழக விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் மாணிக்கம், மலையாளப்பட்டி வரதராஜ ன், ராமலிங்கம் உள்ளிட்டப் பலரும் கலந்துகொண்ட னர்.

கலெக்டரும் இல்லை, டிஆர்ஓவும் இல்லை...தீபாவளிப் பண்டிகை இந்த ஆண்டு அக்டோபர் மாதக் கடைசியில் 27ம்தேதி வந் தது. இருந்தும் அரியலூர், திருச்சி உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் 26ம்தேதி யே விவசாயிகள் குறைதீர் க்கும் கூட்டம் நடத்தப்பட் டது. பெரம்பலூரில் மட்டும் 31ம்தேதி நடத்தப்பட்டது. இதில் குறைகள் மீதான நடவடிக்கை எடுக்கக்கூடிய அதிகாரம் கொண்ட கலெக் டரோ, மாவட்ட வருவாய் அ லுவலரோ பகேற்கவில் லை. அடிக்கடி விவசாயிக ளால் குற்றம் சாட்டப்படும் வேளாண்மைத்துறை, கூட் டுறவுத் துறை அதிகாரிக ளே முன்னின்று கூட்டத்தை நடத்தினர்.

Tags : district ,Perambalur ,Kerala ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்...