×

ரேஷன்கடையில் 200 லிட்டர் மண்ணெண்ணெய் திருட்டு

களியக்காவிளை, நவ.1: இடைக்கோடு அருகே கல்லுப்பாலம் பகுதியில் அமுதம் நியாய விலைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் உள்ள உறுப்பினர்களுக்கு ரேஷனில் வழங்குவதற்காக நேற்று முன்தினம் இரவு 4 பேரல் மண்ணெண்ணெய் லாரியில் கொண்டுவரப்பட்டது. ஊழியர்கள் அதை இறக்கி கடையில் வைத்தனர். இந்நிலையில் நேற்று காலை ரேஷன்கடை ஊழியர்கள் கடையை திறக்க வந்தபோது 3 பேரல் மண்ணெண்ணெய் மட்டுமே இருந்துள்ளது. ஊழியர்கள் இது குறித்து காப்புக்காடு நுகர்பொருள் வாணிப கிடங்கு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காப்புக்காடு நுகர்பொருள் வாணிப கிடங்கு கண்காணிப்பாளர் வேல்முருகன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடம் வந்து பார்வையிட்டனர். அப்ேபாது ஒரு பேரல் மண்ணெண்ணெய் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. பேரலில் 200 லிட்டர் மண்ணெண்ணெய் இருந்தது.  இது குறித்து வேல்முருகன் அளித்த புகாரின் பேரில் பளுகல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : ration shop ,
× RELATED ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்