×

தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு

கோவை, நவ. 1: கோவை மாவட்ட கலெக்டர் வளாகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியினை மாவட்ட கலெக்டர் ராஜாமணி தலைமையில் கலெக்டர் அலுவலக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் எடுத்துக்கொண்டனர்.இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ராஜாமணி தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்திய ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டை பாதுகாப்போம் சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலை நோக்கு பார்வையால் ஒன்றிணைந்த தேச நல்லுணர்வினை பேண எனது பங்களிப்பை நல்குவேன் என்ற உறுதிமொழியை அரசு ஊழியர்கள் எடுத்துக் கொண்டனர்.இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) உமா மகேஸ்வரி, மக்கள் தொடர்பு அலுவலர் நல்லதம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags :
× RELATED வானில் அரிய நிகழ்வு தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு