×

போர்வெல்லுக்கு மூடி அமைத்த ரஜினி மன்றம்

தொண்டாமுத்தூர், நவ.1: கோவை தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மத்வராயபுரம், சாடிவயல், இருட்டுப்பள்ளம், குறிஞ்சிநகர், தொம்புலிபாளையம் கிராமங்களில் மூடப்படாத நிலையில் உள்ள ஆழ்குழாய் கிணறு குழாய்களை கண்டறிந்து அதற்கு மூடி போட்டு மூடும் பணியை ரஜினி மக்கள் மன்றத்தினர் செய்து வருகின்றனர். மன்ற நிர்வாகிகளான ரங்கராஜ், ராமச்சந்திரன் ஆகியோர் திறந்த நிலையில் கிடந்த ஆழ்குழாய்களை மூடினர். கிராம பகுதி மக்களை சந்தித்து, திறந்த நிலையில் கிணறுகளை வைத்திருக்கக்கூடாது. இரும்பு கம்பி போட்டு மூடவேண்டும். குழந்தைகள் உள்ள இடங்களில் நீர் தேக்கங்களை பாதுகாப்பின்றி வைத்திருக்கக்கூடாது என வேண்டுகோள் விடுத்தனர்.



Tags : Rajini ,forum ,Borewell ,
× RELATED அதிமுக மன்ற கட்டிடத்தில் அத்துமீறி...