×

கோவை காங்கிரஸ் பிரமுகருக்கு ஜெர்மனி பல்கலை. டாக்டர் பட்டம்

கோவை, நவ. 1: கோவை கணபதி ராஜீவ் வீதி முல்லை நகரை சேர்ந்தவர் கே.ஏ.கருப்பசாமி. இவர், மாவட்ட லயன்ஸ் சேர்மனாக உள்ளார். அத்துடன், கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் துணை தலைவராகவும் உள்ளார். இவர், லயன்ஸ் கிளப் மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏழைகளுக்கு பல்வேறு உதவிகள் வழங்கி வருகிறார். குறிப்பாக, கணபதி அரசு பள்ளிக்கு காம்பவுண்ட் சுவர் கட்டிக்கொடுத்துள்ளார். அங்குள்ள ஒரு கோயிலுக்கு இலவசமாக ஆழ்துளை கிணறு அமைத்து கொடுத்துள்ளார். பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, ஏழை மக்களுக்கு மருத்துவ நிதியுதவி ஆண்டுதோறும் வழங்குகிறார். இவரது சமூக சேவையை பாராட்டி, ஜெர்மனி நாட்டின் ஸ்டட்கார்ட் நகரில் உள்ள சர்வதேச சமாதான பல்கலைக்கழகம், இவருக்கு ‘டாக்டர் ஆப் சோசியல் சர்வீஸ்’ என்னும் விருது வழங்க முன்வந்தது. இவ்விருது வழங்கும் விழா திருச்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்தது. ஜெர்மனி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஜார்ஜ் புரூண்ட் பீட்டர் இந்த விருதை வழங்கினார். விருதுபெற்ற இவருக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயல்தலைவர் மயூரா ஜெயக்குமார், மாவட்ட லயன்ஸ் கவர்னர் கர்ணபூபதி, காங்கிரஸ் நிர்வாகிகள் கணபதி சிவக்குமார், ரூபர்ட், நடராஜ், அமல்ராஜ் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : Congress ,German ,Congressman ,Coimbatore ,
× RELATED முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில்...