×

சுகாதார விழிப்புணர்வுக்காக அரசு பள்ளிகளில் சிறப்பு குழு அமைக்க முடிவு

கோவை, நவ.1:கோவை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மாணவர்களை கொண்டு சிறப்பு குழு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.கோவை கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சரவணம்பட்டி அரசு பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான சிறப்பு முகாம் நடந்தது.

இதில், சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பேசுகையில், ‘‘பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அடிக்கடி விடுப்பு எடுத்தாலோ அல்லது நீண்ட நாள் விடுமுறையில் இருந்தாலோ அது குறித்து சம்பந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர்கள் விசாரித்து அறிக்கை அளிக்க வேண்டும். அவர்களுக்கு காய்ச்சல் போன்ற தொற்று நோய் இருந்தால், மாணவர்களின் சிகிச்சைக்கு அறிவுரைகளை வழங்க வேண்டும், அந்தந்த பள்ளி வகுப்புகளில் மாணவர்களிடம் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த மாணவர்களை கொண்டு சிறப்பு குழு அமைக்க வேண்டும். மாணவர்கள் அவர்கள் குடியிருக்கும் வீடுகள் மற்றும் பள்ளிகளை தூய்மையாக வைத்திருக்க அறிவுறுத்த வேண்டும்,’’ என்றனர்.

Tags : committee ,government schools ,
× RELATED தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம்...