×

பிராந்திய ஒப்பந்தத்தில் கையெழுத்திட எதிர்ப்பு தமிழகத்தில் 100 இடங்களில் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, நவ.1: ஈரோட்டில் அதன் மாநில பொதுச்செயலாளர் சண்முகம் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:பிராந்திய கூட்டு பொருளாதார ஒப்பந்தத்தில் ஆசியா, ஐரோப்பியாவில் உள்ள 16 நாடுகளுடன் நவம்பர் 4ம் தேதி மத்திய அரசு கையெழுத்திடுகிறது. இதன்மூலம், 16 நாடுகளில் இருந்தும் வேளாண் விளை பொருட்கள் எந்தவித வரியும் இல்லாமல் இந்தியாவிற்குள் இறக்குமதியாகும்.பால் பொருட்களை இறக்குமதி செய்வதன் மூலம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பால் மற்றும் பால் பொருட்களின் விலை வீழ்ச்சியடையும். இந்திய பால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவார்கள். விவசாயிகளுக்கும் நியாயமான விலை கிடைக்காமல் போகும். விவசாயத்தையும், விவசாயிகளையும் அழிக்கும் வகையிலான இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடக்கூடாது. இதைக்கண்டித்து ஒப்பந்தம் கையெழுத்தாகும் நவம்பர் 4ம் தேதி தமிழகத்தில் விவசாய சங்கம் சார்பில் 100 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். நடைபெற உள்ள பாராளுமன்ற கூட்டத் தொடரில் இந்த பிரச்னை குறித்து பெரிய அளவில் விவாதிக்கப்படும். அரசு சார்பில் இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும். கரும்பிற்கு மத்திய, மாநில அரசுகள் அறிவித்த விலையை சர்க்கரை ஆலை நிர்வாகம் வழங்காமல் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பாக்கி வைத்துள்ளது.

இந்த ஆலைகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந் நிலையில், இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் பெரிய நிறுவனங்கள் மட்டுமே லாபம் ஈட்டும். விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காமல் விளைவித்த பொருட்களை நஷ்டத்திற்கு தான் விற்க வேண்டும். மேலும், கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து அவர்களுக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்து தர விவசாயிகளை அரசு வலியுறுத்தும் நிலை ஏற்படும். இந்த சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு முன்பு விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களுடன் கலந்து பேசி விவாதித்து நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : places ,Tamil Nadu ,
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...