×

கோவை - மேட்டுப்பாளையம் இடையே புதிய ெமமோ ரயில் சேவை துவங்கியது

கோவை, நவ.1:கோவை - மேட்டுப்பாளையம் இடையே புதிய நவீன வசதிகள் பெட்டிகள் கொண்ட மெமோ ரயில் சேவை நேற்று துவங்கப்பட்டது.கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக  டீசல் இன்ஜிசின் மூலம் தினசரி பாசஞ்சர் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் பாசஞ்சர் ரயில் சேவை கடந்த 30ம் தேதியுடன் நிறைவுற்றது. நேற்று முதல் கோவை - மேட்டுப்பாளையம் இடையே மெமோ ரயில் சேவை துவங்கப்பட்டுள்ளது. சென்னை ஐ.சி.எப் ரயில்வே தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட இந்த அதிநவீன ரயிலில் இரண்டு பக்கமும் இன்ஜின் உள்ளது. எட்டு பெட்டிகள் கொண்ட இந்த ரயில் 614 பேர் இருக்கையில் அமர்ந்து பயணிக்கும் வகையிலும் 1781 நின்று கொண்டு பயணிக்கும் வகையிலும்  2600 பேர் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்புக்காக 32 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 105 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும் வகையில் இந்த ரயில்கள் உருவாக்கப்பட்டுள்ளது. நேற்று காலை மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இந்த ரயிலுக்கான சிறப்பு பூஜை செய்யப்பட்டு இயக்கப்பட்டது.


Tags : Coimbatore ,Mettupalayam ,
× RELATED பறக்கும் படையால் வியாபாரம் பாதிப்பு