×

தொடர் மழையால் கருங்கல்பாளையம் சந்தையில் மாடு வரத்து குறைந்தது

ஈரோடு, நவ.1:தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழையால் ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகள் வரத்து குறைந்ததால் விற்பனையும் சரிந்தது. ஈரோடு கருங்கல்பாளையம் சோதனைச்சாவடி அருகே வாரந்தோறும் புதன், வியாழக்கிழமைகளில் மாட்டு சந்தை கூடும். இதில் புதன்கிழமை வளர்ப்பு மாடுகளும், வியாழக்கிழமை கறவை மாடுகளும் விற்பனை செய்யப்படும். இந்த சந்தைக்கு வரத்தாகும் மாடுகளை ஈரோடு மட்டுமல்லாமல் தமிழகத்தின் பிற மாவட்டத்தை சேர்ந்தவர்களும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா போன்ற மாநிலத்தை சேர்ந்தவர்களும் அதிகளவில் வந்து வாங்கி செல்வர். வாரந்தோறும் இந்த சந்தையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனை செய்யப்படும். இந்நிலையில், தமிழகத்தில் தொடர்மழை காரணமாக கடந்த சில வாரங்களாக, கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடு வரத்து பாதியாக குறைந்தது. நேற்று கூடிய சந்தையில் 450 மாடுகளே வந்ததால்  மாடுகளை வாங்க வந்த வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இது குறித்து மாட்டுசந்தை மேலாளர் முருகன் கூறுகையில், `தொடர் மழை, பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனை செய்ய முன்வரவில்லை. இதனால், நேற்று நடந்த சந்தையில் பசு-250, எருமை-100, கன்று-100 என 450 மாடுகள் வந்தது. தமிழகத்தை போலவே கேரளாவிலும் தொடர் மழை காரணமாக மாடுகளை வாங்க அந்த மாநில வியாபாரிகள் வரவில்லை. இதனால், சந்தைக்கு வந்த குறைந்த மாடுகளை வியாபாரிகள் போட்டிபோட்டு வாங்கி சென்றனர். மேலும், தமிழக அரசின் விலையில்லா கறவை மாடுகள் திட்டத்தின் கீழ் அதிகாரிகள், பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு மாடுகளை வாங்கி கொடுத்தனர். இதன் காரணமாக, இந்த வாரம் 90 சதவீத மாடுகள் விற்பனையானது’ என்றார்.



Tags : Karungalpalayam ,
× RELATED பறக்கும் படை அதிகாரிகளின்...