×

திருக்கழுக்குன்றம் அருகே ₹30 கோடியில் கட்டப்பட்டு வரும் பாலாற்று தடுப்பணையின் கரைகள் சரிந்தது

திருக்கழுக்குன்றம், நவ.1:  திருக்கழுக்குன்றம் தாலுகாவிற்குட்பட்ட வல்லிபுரம் கிராமத்தில் பாலாற்றின் குறுக்கே சுமார் ரூ.30 கோடியில் தடுப்பணை ஒன்று கட்டப்பட்டு வருகின்றது.    பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்ட வருகின்ற  தடுப்பணையின் இரு கரையோரமும் கரையை பலப்படுத்தும் விதமாக மண் குவித்து அவை மீது பாறை கற்களை அடுக்கி வைத்திருந்தினர்.   இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும்  மழையில் பாலாற்றின் இருபுறமும்   அமைக்கப்பட்ட அந்த பாறை கற்களால் அடுக்கப்பட்ட அந்த கரைகள் நேற்று சரிந்துப் போனது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகவும் வேதனையடைந்துள்ளனர். இதனிடையே எம்எல்ஏக்கள் ஆர்.டி. அரசு (செய்யூர்)  எல்.இதயவர்மன் (திருப்போரூர்) ஆகியோர் சேதமடைந்த தடுப்பணையின் கரையை பார்வையிட்டு அவர்கள் பேட்டியளிக்கையில்... “விவசாயிகளின் நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு இந்த தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. அவசரகதியில்  கட்டப்பட்ட இந்த தடுப்பபணையின் கரை இப்படி சேதமடைந்துள்ளது. இந்தப் பணி தரமற்றதாக உள்ளது. உடனடியாக இதை சரி செய்ய வேண்டும் .

இந்நிலையில் இன்னும் சில தினங்களில் முதலமைச்சர் இந்த தடுப்பணையை திறந்து வைக்க உள்ளார். உடனடியாக இப்பணியை முறையாக சரி  செய்ய வேண்டும், இல்லையென்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்  என்றனர்.
“ இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “ஆண்டுதோறும் மழைக்காலங்களில் இந்த பாலாற்றில் மழை நீர் நிரம்பி ஓடி வீணாக கடலில் கலக்கிறது. அதனால்  எங்கள் பகுதி பாலாற்றில் தடுப்பனை அமைத்து வீணாக கடலில் கலக்கும் மழை  நீரை தேக்க வழிவகை செய்ய வேண்டுமென்று கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது எங்கள் பகுதியில் சுமார் ரூ. 30 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டுப்பட்டு வருகிறது.
   இந்த தடுப்பணையின் இருபுறமும் பக்கவாட்டு கரைகளை பலப்படுத்தும் வகையில் மண்மேடு அமைத்து அதன் மீது பாறை கற்களை அடுக்கி வைத்திருந்தனர்.

இந்திலையில் தற்போது சில தினங்களாக பெய்து வரும் மழையில் இந்த பக்கவாட்டு கரையில் அடுக்கி வைத்திருந்த பாறை கற்கள் சரிந்து விழுந்துள்ளது. பாலாற்றில் இன்னும் மழை நீர் கூட செல்லாத நிலையில் இந்த சிறிதளவு மழைக்கே  இந்த சரிவு ஏற்பட்டுள்ளது என்பது வேதனைக்குரிய விஷயம் .  இந்த பக்கவாட்டு கரையே இப்படி தரமற்றதாக இருக்கின்ற நிலையில் தடுப்பணையின் நிலை என்பதும் அதன் உறுதி தன்மை என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. இந்த  பக்கவாட்டு கரை இப்படி பலவீனமாக உள்ள நிலையில்  பாலாற்றில் அதிகளவு தண்ணீர் வந்தால் பக்கவாட்டு கரை உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகும் அபாய நிலையும் உருவாகும் எனவே உடனடியாக அரசு நிர்வாகத்தினர் இதன் மீது கவனம்  செலுத்தி இந்த தடுப்பணையின் நிலை குறித்து ஆய்வு செய்து காலாகாலத்திற்கும் இந்த தடுப்பணை பொது மக்களுக்கும் விவசாயத்திற்கும் உதவும் படி இருக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

Tags :
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...