×

மழைநீரை வீணாக்காமல் கிணற்றில் சேமிக்கும் விவசாயி

காஞ்சிபுரம், நவ.1: காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர் தாலுகாவுக்கு உட்பட்டது சயனபுர கிராமம். பிரதான விவசாய கிரமமான இந்த கிராமத்தில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் மூன்று போகமும் நெல் சாகுபடி  செய்யப்படுகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து சில தினங்களாக பெய்துவரும் தொடர் மழையால் சயனபுரம் பகுதியில் நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலங்களில் தண்ணீர் தேங்கியது. சமயோசிதமாக சிந்தித்த  பாவானந்தம் என்ற விவசாயி அருகில் நெல் சாகுபடி செய்திருந்த விவசாயிகளான ஜெயவேல், விஷ்ணு உள்ளிட்ட சில விவசாயிகளின் நிலங்களில் தேங்கி நிற்கும் நீரினை தனக்கு சொந்தமான கிணற்றில் சேமிக்கலாம் என ஆலோசித்து  முடிவெடுத்தனர். இதனைத் தொடர்ந்து தேங்கிய மழைநீரை  விவசாயி பாவானந்தம் கிணற்றுக்கு திருப்பி தற்போது அந்தக் கிணறு மழை நீரால் நிரம்பி வருகிறது.  தமிழக அரசு தீவிரமாக மழை நீர் சேகரிப்பை வலியுறுத்தி வரும் நிலையில்  விவசாயிகளின் நிலங்களில் தேங்கும் நீரினை தனது  கிணற்றில் சேமித்த விவசாயியை பொதுமக்கள் பாராட்டினர்.

Tags : wells ,
× RELATED பிஎன்பி பரிபாஸ் ஓபன் டென்னிஸ்: அல்காரஸ், ஸ்வியாடெக் சாம்பியன்