×

திருத்துறைப்பூண்டி- திருப்பலி செல்லும் பல்லாங்குழி சாலையால் பொதுமக்கள் கடும் அவதி

திருத்துறைப்பூண்டி, நவ.1: திருத்துறைப்பூண்டி-திருப்பலி செல்லும் சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திருத்துறைப்பூண்டி மடப்புரம் சர்ச் அருகில் இருந்து தார் சாலை செல்கிறது இந்த சாலை வழியாகத்தான் திருபாலி, கொத்தமங்கலம், எழிலூர், களப்பால் போன்ற பல்வேறு கிராமங்களுக்கு மக்கள் சென்று வருகின்றனர். இந்த பகுதியிலிருந்து பொதுமக்கள், மாணவ, மாணவிகள் திருத்துறைப்பூண்டிக்கு வர வேண்டும். இந்நிலையில் இந்த சாலை பாதி நல்ல நிலையில் உள்ளது. பாதி சாலை பொதுமக்கள் நடத்துகூட சொல்ல முடியாத நிலையில் படுமோசமாக உள்ளது. தற்போது மழைகாலம் என்பதால் சாலையில் உள்ள குழியில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் சீரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை வைத்து உள்ளனர்.இதுகுறித்து முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் ராஜா கூறிகையில், திருத்துறைப்பூண்டி ஒன்றிய முழுவதும் சாலை போடப்பட்டு பல அண்டுகள் ஆகிவிட்டது. அனைத்து சாலையும் சேதமடைத்து பொதுமக்கள் நடந்து கூட போக முடியாத அவலநிலைஉள்ளது. இந்த சாலையும் அப்படிதான் உள்ளது. எனவே ஒன்றியம் முழுவதும் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Tags : Thiruthuraipoondi ,Tirupali ,
× RELATED திருத்துறைப்பூண்டியில் இருந்து சென்னைக்கு கூடுதலாக பஸ் இயக்கம்