×

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு மழை காலங்களில் மின்கம்பிகளுக்கு அருகே பட்டம் விடக்கூடாது

மன்னார்குடி, நவ.1:மழைக்காலங்களில் மின்கம்பிகளுக்கு அருகே பட்டம் விடக்கூடாது என்று நகர உதவி செயற்பொறியாளர் சம்பத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகி்மான கழகம் சார்பில் மழை காலங்களில் ஏற்படும் மின்விபத்துகளை எவ்வாறு தவிர்ப்பது என்பது குறித்து மின் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் மன்னார்குடியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர உதவி செயற்பொறியாளர் சம்பத் தலைமை வகித்தார். ஆர்டிஓ அலுவலகம் அருகே நடைபெற்ற பிரசார நிகழ்ச்சி மன்னார்குடி ஆர்டிஓ புண்ணியக்கோட்டி துவக்கி வைத்தார்.இதுகுறித்து நகர உதவி செயற்பொறியாளர் சம்பத் கூறுகையில், தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில், மின் விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும் விதமாக, பொதுமக்கள் அதிக விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை தொடக்கூடாது. மற்றவர்களையும் தொட அனுமதிக்கக் கூடாது. உடனே அருகில் உள்ள மின்வாரியத்திற்கு தகவல் தர வேண்டும்.மின் பாதைக்கு அருகில் உள்ள மரங்கள் மற்றும் கிளைகளை மின் ஊழியர் துணையோடு வெட்ட வேண்டும். தண்ணீர் தேங்கிய இடங்களில் நிற்பதையும், நடப்பதையும் தவிர்க்க வேண்டும். மேலும் குழந்தைகளை விளையாட விடக்கூடாது. குழந்தைகள் மின் கம்பிகளுக்கு அருகே பட்டம் விடக்கூடாது.

மழைக்காலத்தில் மின் மாற்றிகள், மின் பெட்டிகள், மின் இழுவை கம்பிகள் அருகில் செல்லக்கூடாது. மின்கம்பத்தின் அருகில் உள்ள இழுவை கம்பி யிலோ, மின் கம்பத்திலோ கயிறு கட்டி துணிகளை உலர்த்தக் கூடாது. மின் கம்பங்களில் கால்நடைகளை கட்டக்கூடாது.வீடுகளில் மின் கசிவின்றி வயரிங்கை பராமரிக்க வேண்டும். வீடுகளில் மின் கசிவால் ஏற்படும் ஆபத்தை தடுக்க இஎல்சி.பி. சாதனம் பொருத்தப்பட வேண் டும். வீட்டில் மின் சாதனத்தில் மின் அதிர்ச்சியை உணர்ந்தால், உடனே உலர்ந்த ரப்பர் காலணியை அணிந்து, மின் மெயின் சுவிட்ச்சை அணைக்க வேண்டும்.இடி, மின்னலின் போது மின் கம்பங்கள், மின் மாற்றிகள், துணை மின் நிலை யங்கள் போன்ற இடங்களில் தஞ்சம் அடைய கூடாது. மின் பாதைக்கு கீழே போர்வெல் போடக்கூடாது மேலும் லாரி, டிப்பர்,ஜேசிபி, கிரேன் ஆகியவற்றை பயன் படுத்தக்கூடாது. இடி, மின்னலின் போது டிவி, மிக்சி, கிரைண்டர், கம்ப்யூட்டர் போன்ற மின் சாதனங்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது என்றார்.பிரச்சாரத்தில் உதவி செயற்பொறியாளர் அருள்ராஜ், இளநிலைப் பொறியாளர்கள் கண்ணன், பாலசுப்ரமணியன், ராஜகோபால், கணேசன், சங்கர் குமார் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் பங்கேற்று விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கினர்.


Tags : Marxist ,Communist Party ,season ,
× RELATED சிஐடியு வைத்தியநாதன் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்