×

ரவுடி கொலையில் 2 பேருக்கு ஆயுள்

திருவள்ளூர், நவ. 1:  ஆவடியை சேர்ந்தவர் பூபாலன் (22). கடந்த 2008ம் ஆண்டு அண்ணாநகரை சேர்ந்த பிரேம் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆவடி போலீசார் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளியே  வந்த அவர் அடிதடியில் ஈடுபடாமல் இருக்க, பெற்றோரால் வெளியூரில் தங்க வைக்கப்பட்டார். பூபாலன் வெளியே வந்து ஜாலியாக சுற்றிக்கொண்டிருந்ததைக் கேள்விப்பட்ட பிரேமின் தங்கை கணவர் ஆனந்தராஜ், ரவுடி பூபாலனை தீர்த்துக்கட்ட  முடிவு செய்தார். அதன்படி கடந்த 17.02.2010 அன்று ஆதிநாராயணன், பூபாலனிடம் நைசாக பேசி இந்து கல்லூரி அருகே ஏரிக்கால்வாய் பகுதிக்கு வந்தனர். அப்போது ரவுடி பூபாலனை, ஆதிநாராயணன் மற்றும் நண்பர்கள் சரமாரியாக  வெட்டிக்கொலை செய்தது தெரிந்தது. இதுகுறித்து பூபாலனின் தம்பி தங்கராஜ் கொடுத்த புகாரின்பேரில் பட்டாபிராம் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குப்பதிந்து, ஆதிநாராயணன், செல்வேந்திரன், மகேந்திரன், சுரேஷ் ஆகிய நாலவரை கைது  செய்து புழல் சிறையில் அடைத்தனர். இதில், சுரேஷ் இறந்துவிட்டார்.

இவ்வழக்கு குறித்த விசாரணை திருவள்ளூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் மோகன்ராம் ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி தீப்தி அறிவுநிதி நேற்று தீர்ப்பளித்தார்.
தீர்ப்பில், ‘கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நாராயணன் மற்றும் செல்வேந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், ₹10 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது.  இவ்வழக்கில் சுரேஷ் இறந்துவிட்டதாலும், மகேந்திரன் மீது போதிய ஆதாரம் இல்லாததாலும் விடுவிக்கப்படுகின்றனர்’’ என குறிப்பிடப்பட்டு உள்ளது. இதையடுத்து குற்றவாளிகள் இருவரும் பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு புழல்  சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags : murder ,
× RELATED புதுச்சேரியில் பிரபல தாதாவாக வலம்...