×

செயற்பொறியாளர் வேண்டுகோள் பேராபத்து நிகழும் முன் சீரமைக்க கோரிக்கை திருவாரூரில் 7வது நாளாக நீடிப்பு மருத்துவர்கள் மனிதசங்கிலி போராட்டம்

திருவாரூர், நவ.1: மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி நேற்று 7வது நாளாக திருவாரூரில் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டும், மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், முதுநிலை மருத்துவர்களுக்கு கலந்தாய்வு நடத்திட வேண்டும் , கிராம சேவை செய்த மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்பில் 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 25ம் முதல் மாநிலம் தழுவிய அளவில் அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி நேற்றும் 7வது நாளாக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் அரசு மருத்துவர்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அவசர சிகிச்சைக்கு கூட போதுமான மருத்துவர்கள் இல்லாமல் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் கோரிக்ககைளை வலியுறுத்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன் மனிதசங்கிலி போராட்டதிலும் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் பாரதிதாசன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் பொறுப்பாளர்கள் கார்த்திகேயன், லெனின், அன்சாரி, தேவேந்திரன், சபி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : Request Reorganization ,
× RELATED திருக்கழுக்குன்றம் அருகே சோகம் குட்டையில் மூழ்கி சிறுவன் பலி