×

திருத்துறைப்பூண்டியில் சேறும் சகதியுமான உழவர் சந்தை வளாகத்தை சீரமைக்க கோரிக்கை

திருத்துறைப்பூண்டி, நவ.1:திருத்துறைப்பூண்டியில் சேறும் சகதியுமான உழவர் சந்தை வளாகத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திருத்துறைப்பூண்டி ஒழுங்கு முறை விற்பனைகூட வளாகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக உழவர் சந்தை இயங்கி வருகிறது. இங்கு வேதாரண்யம் தாலுகா பகுதியான கத்தரிப்புலம், செட்டிபுலம் போன்ற பல்வேறு கிராமங்களில் இருந்து நாட்டு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் சந்தை வளாகம் முறையான பராமரிப்பின்றி சேறும் சகதியுமாக இருந்து வருகிறது. மழைக் காலத்தில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தி தளமாக இருக்கிறது. மேலும் பன்றி, நாய்கள், மாடுகள் உள்ளே நுழைந்து மேலும் சந்தையை அசுத்த படுத்துகிறது.

உழவர் சந்தை வாசலில் அரசு விதிகளை மீறி கருவாடு மூட்டை மூட்டையாக விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் துர்நாற்றம் தாங்காமல் சந்தைக்குள் வர தயங்குகின்றனர். பொதுமக்களிடமிருந்து திருத்துறைப்பூண்டி நுகர்வோர் மையத்திற்கு புகார்கள் வரப்பெற்று உரிய அலுவலருக்கு அனுப்பியும் நடவடிக்கை இல்லை.எனவே திருவாரூர் மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து சந்தை வளாகத்தை சீரமைத்து பொதுமக்களுக்கு உதவிட வேண்டும் என்று மாவட்ட நுகர்வோர் மைய தலைவர் வழக்கறிஞர் நாகராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags : Tirupur ,
× RELATED திருப்பூரில் 55 பேருக்கு கொரோனா ஒருவர் பலி