×

போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை அகற்றாவிட்டால் அபராதம் உரிமையாளர்களுக்கு பேரூராட்சி எச்சரிக்கை

முத்துப்பேட்டை, நவ.1: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் ஆடுகள் மாடுகள் உட்பட கால்நடைகள் வளர்ப்போர் பலரும் அவற்றை முறையாக பராமரிக்க வழியின்றி வீதிகளில் திரிய விட்டுள்ளனர். இதனால் இரவு பகல் எந்நேரமும் நகர்பகுதி கடைவீதிகளில் சாவகாச உலா வரும் கால்நடைகள் அங்கு தேங்கிக்கிடக்கும் காய்கறி பழக்கழிவுகள், ஓட்டல்கள், மளிகை கடைகளிலிருந்து வீசியெறியப்படும் கழிவுகள் ருசிபார்க்கும் இவை வயிறு நிரம்பியதும் கிடைத்த இடத்தில் கால்நீட்டி ஓய்வெடுக்கின்றன. சில போக்குவரத்து பாதையில் ஜம்பமாக படுத்து வாகன விபத்துகளுக்கு காரணமாகி வருகின்றன. அதேபோல் மாடுகள் தெருக்களில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அதிகளவில் தின்று உயிரையும் விடுகிறது.இதில் குறிப்பாக பகலில் கடைதெருவில் வளம் வரும் மாடுகள் பொதுமக்களை வங்கி செல்லும் பொருட்களை பறித்துக்கொண்டு ஓடுகிறது.

இதனால் இவற்றை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கடந்த 29ம்தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இதனையடுத்து தினகரன் செய்தி எதிரொலியாக முத்துப்பேட்டை பேரூராட்சி சார்பில் வாகனம் மூலம் மைக்கில் அறிவிப்பு செய்யப்பட்டு கால்நடைகள் வளர்போர் மாடுகளை அகற்றாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுபட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் செய்தி வெளியிட்ட தினகரனுக்கு நன்றியை தெரிவித்தனர்.



Tags : fines owners ,
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு