திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் பள்ளியில் உலக சிக்கன தினம்

திருத்துறைப்பூண்டி, நவ.1: திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய ஒருமைப்பாட்டு தினம் மற்றும் உலக சிக்கன தினம் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமையாசிரியர் திருமாறன் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன், ஆசிரியர் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி என்எஸ்எஸ்திட்ட அலுவலர் தனபாலன் வரவேற்றார்.உலக சிக்கன தினம் குறித்தும், சிக்கனமாக இருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் திருத்துறைப்பூண்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி என்எஸ்எஸ் திட்ட அலுவலர் சின்னதுரை பேசினார். தேசிய ஒற்றுமை தினம் சர்தார் வல்லபாய்படேலின் வாழ்க்கை வரலாறு சமஸ்தானங்களை இணைப்பதில் அவருடைய முயற்சி. ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கிய விதம் உள்ளிட்டவை குறித்து பாமணி அரசு மேல்நிலைப்பள்ளிஎன்எஸ்எஸ்திட்ட அலுவலர் முருகேசன் பேசினார்.

சிக்கனதினத்தைக் குறிக்கும் வகையில் கலந்து கொண்ட அனைவருக்கும் திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிஎன்எஸ்எஸ் அமைவு சார்பாக உண்டியல்கள் வழங்கப்பட்டது. உலக சிக்கன தினம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு தினம் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பாமணி மற்றும் நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி என் எஸ்எஸ்மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் திட்ட அலுவலர் சக்கரபாணி நன்றி கூறினார்.

Related Stories:

>