×

கடையின் பூட்டை உடைத்து செல்போன் திருட்டு

விருத்தாசலம், நவ. 1: விருத்தாசலம் தெற்கு பெரியார் நகரை சேர்ந்தவர் நடராஜன் மகன் ஆனந்தகுமார்(36). இவர் அதே பகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் எதிரே செல்போன் விற்பனை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று காலை வழக்கம்போல் வந்து கடையை திறந்துள்ளார். அப்போது கடை ஷெட்டரின் பூட்டு அறுக்கப்பட்டு திறந்து கிடந்ததை  கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்த 5 செல்போன்கள் மற்றும் பணப்பெட்டியில் இருந்த ரூ.8 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது.  இது குறித்து ஆனந்தகுமார் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள  காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED கொரோனா வைரஸ் முன்தடுப்பு...