பாதிரியார் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கடலூர், நவ. 1: கடலூர் அருகே திருவந்திபுரத்தில், கிறிஸ்தவ பாதிரியார் திருநாவுக்கரசு ஜான்பால், கர்ப்பிணி பெண் கீர்த்தனா ஆகியோர் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும்,  பாதிக்கப்பட்டவர்கள் மீது தாமதமாக பொய் புகார் பெற்று பதிவு  செய்துள்ள வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தியும், கடலூர் மாவட்டத்தில் சிறுபான்மை மக்களின் அச்சத்தை போக்கி பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் தமிழக  மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பினர் கடலூர் தலைமை அஞ்சல்  நிலையம் அருகில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அமைப்பாளர் மாதவன் தலைமை தாங்கினார். அன்னை தெரசா பொதுநல பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் அகஸ்டீன் பிரபாகரன் வரவேற்றார். திமுக நகர செயலாளர் ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயகுமார், சுப்புராயன், அமர்நாத்,  ராஜேஷ்கண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குளோப், அரிகிருஷ்ணன், தமிழக வாழ்வுரிமை கட்சி அருள்பாபு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் ராமலிங்கம், விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர்  முல்லைவேந்தன், நாடாளுமன்ற குழு பொறுப்பாளர் தாமரைச்செல்வன், வழக்கறிஞர்  திருமார்பன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன், சந்திரசேகரன், திராவிட கழக மாவட்ட தலைவர் தென்சிவகுமார், பேராசிரியர் குழந்தைவேலனார், கவிஞர் பால்கி, குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு பொதுச்செயலாளர் மருதவாணன் உள்பட பலர் கண்டன உரையாற்றினர்.

Related Stories:

>