×

ஆழ்துளை கிணறு விவகாரம் நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

கடலூர், நவ. 1: கடலூர் நகராட்சி ஆணையர் டாக்டர் அரவிந்த் ஜோதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,   கடலூர் பெருநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் வீட்டின் உரிமையாளர்கள், தங்கள் வீடுகளில் அமைந்துள்ள ஆழ்துளை  கிணறு மற்றும் திறந்தவெளி கிணறு ஆகியவைகள் பயன்பாட்டில் உள்ளதா, அவ்வாறு பயன்பாட்டில் இருந்தாலும், இல்லாமல் இருந்தாலும் அதனை பாதுகாப்பாக பொதுமக்களுக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாமல் அமைத்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது. நில உரிமையாளர்கள் தங்கள் வயல்வெளிகளில் அமைத்துள்ள ஆழ்துளை கிணறு மற்றும் திறந்தவெளி கிணறு ஆகியவைகள் பயன்பாட்டில் உள்ளதா என்பதை உறுதிசெய்து பாதுகாப்பாக பொதுமக்களுக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாமல் அமைத்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் சம்பந்தப்பட்ட கிணறுகளை மழைநீர் சேகரிப்பு வடிவமைப்பாக அமைத்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதில் தவறும்பட்சத்தில் அரசாணைப்படி காவல் துறையில் புகார் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
 மேலும் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பயன்படுத்தாத உபயோகமில்லாத ஆழ்துளை கிணறு மற்றும் திறந்தவெளி கிணறு இருந்தால் நகராட்சிக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது, என தெரிவித்துள்ளார்.
வேப்பூர்:  நல்லூர் ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ் தலைமையில் மூடப்படாத ஆழ்துளை கிணறுகளை கண்டறிந்து அவைகளை மூடும் பணி நடந்து வருகிறது. சிறுநெசலூரில், பயன்படுத்தப்படாமல் இருந்த ஆழ்துளை கிணறு, வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ் தலைமையில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நீலாவதி திலகவதி முன்னிலையில் மூடப்பட்டது.

Tags : Municipal Commissioner ,
× RELATED காலை 5.30 மணி முதல் மாதிரி வாக்குப்பதிவு:...