×

மழையில் நனைந்து துர்நாற்றம் தமிழக அரசுக்கு கோரிக்கை பஸ் நிலையத்தில் அரசு பஸ் டிரைவரை தாக்கியவர் கைது

புதுக்கோட்டை, நவ.1: புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் நேற்று அதிகாலையில் பொன்னமராவதி வழியாக திண்டுக்கல் செல்வதற்கு அரசு பஸ் ஒன்று தயார் நிலையில் இருந்தது. பஸ்சின் டிரைவராக ரெங்கராஜன் இருந்தார். அப்போது அரசு பஸ்சை வெளியே எடுப்பதற்கு இடையூராக புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி வழியாக பட்டுக்கோட்டை செல்லும் தனியார் பஸ் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தனியார் பஸ் டிரைவரான அறந்தாங்கி பிராமணவயல் பகுதியை சேர்ந்த வீரையாவிற்கும், அரசு பஸ் டிரைவர் ரெங்கராஜனுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வாக்குவாதம் முற்றியதால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக்கொண்டனர்.

இதில் காயமடைந்த அரசு பஸ் டிரைவர் ரெங்கராஜன் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வழக்குப்பதிவு செய்து தனியார் பஸ் டிரைவர் வீரையாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags : government bus driver ,bus station ,
× RELATED ரயில் மோதி அரசு பஸ் டிரைவர் பலி