×

சிதம்பரத்தில் சேறும், சகதியுமான சாலை சீரமைக்கும் பணி துவக்கம்

சிதம்பரம், நவ. 1: கடலூர் மாவட்டம் சிதம்பரம் ஞானப்பிரகாசம் தெருவில் சின்ன மார்க்கெட் அமைந்துள்ளது. பாதாள சாக்கடை பணிகளால் சின்ன மார்க்கெட் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலை வழியாக தனியார் மெட்ரிக்  மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் தினமும் சென்று வருகின்றனர். தற்போது மழை பெய்து வருவதால் இந்த குண்டும், குழியுமான சாலை சேறும், சகதியுமான சாலையாக மாறியுள்ளது. இச்சாலையில் செல்லும் பள்ளி மாணவர்கள் பலர் விபத்திற்குள்ளாகி வந்தனர்.
இது தொடர்பான செய்தி தினகரன் நாளிதழில் புகைப்படத்துடன் வெளியானது. இதன் எதிரொலியாக நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா உத்தரவின் பேரில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்த இடங்களில் புதிய சாலை போடும் பணி  தொடங்கியுள்ளது. நேற்று சிதம்பரம் நகராட்சி பொறியாளர் மகாதேவன் முன்னிலையில் ஞானப்பிரகாசம் தெரு சின்ன மார்க்கெட் சாலையில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு சீரமைக்கும் பணி நடந்நது. விரைவில் அந்த பகுதியில் புதிய தார்சாலை  போடும் நடைபெறும் என பொறியாளர் மகாதேவன் தெரிவித்தார்.

Tags : Commencement ,Chidambaram ,
× RELATED சென்னை கிண்டி கிங் ஆய்வகத்தில் 10...