×

காலவரையற்ற வேலை நிறுத்தம் மருத்துவ சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்

கடலூர், நவ. 1: அரசு மருத்துவர்களுக்கு அளித்த உறுதிமொழிகளை தமிழக அரசு  நிறைவேற்றாததால் தற்போது காலவறையற்ற வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. எனவே, மருத்துவ சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண  வேண்டுமென அரசு பணியாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.  இது தொடர்பாக அச்சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் கடலூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம், மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு  ஏற்ப மருத்துவர்கள் நியமனம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் ஒரு வாரமாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர் சங்கங்களை தமிழக அரசு அழைத்து  பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். கடந்த முறை அரசு மருத்துவர்கள் நடத்திய போராட்டங்களின்போது அரசு பேச்சுவார்த்தை நடத்தி உறுதிமொழிகள் அளித்தது. ஆனால் அவற்றை  நிறைவேற்றவில்லை. அதன் காரணமாகத்தான் தற்போது காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவம் வணிகமாக மாறிவிட்ட நிலையில் கோடிக்கணக்கான மக்கள், அரசு மருத்துவமனையை தான் நம்பியுள்ளனர்.

தற்போது மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில் பாதிக்கப்படும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.இதேபோல், அனைத்து பிரச்னைகளிலும் போராட்டம் நடத்தும் சங்கங்களை அழைத்து அரசு  பேச்சுவார்த்தை நடத்தினால் தான் தீர்வு காண முடியும். அதனை விடுத்து சங்கங்களை அலட்சியப்படுத்துவது எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும், என்றார்.மாநில துணை தலைவர் சரவணன், மாவட்ட செயலாளர் விவேகானந்தன் ஆகியோர்  உடனிருந்தனர்.

Tags : strike ,unions ,
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து