×

வடக்குத்து கிராமத்தில் ஆழ்துளை கிணற்றை மூட கோரிக்கை

நெய்வேலி, நவ. 1: குறிஞ்சிப்பாடி ஒன்றியம் வடக்குத்து, கிழூர் ஊராட்சி கிராமத்தில் உள்ள பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும் என ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து மாவட்டத்தின் பல பகுதிகளில் பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டு  வருகின்றன. இந்நிலையில், குறிஞ்சிப்பாடி ஒன்றியம் வடக்குத்து, கிழூர் கிராமத்தில் உள்ள முந்திரி காட்டு பகுதியில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன் எண்ணெய் ஆய்வுக்காக தனியார் நிறுவனம் சார்பில் ஆழ்துளை கிணறுகள் தோண்டப்பட்டது. பின்னர்  அந்த கிணற்றை அப்படியே விட்டுவிட்டனர். இந்த இடத்தில் தற்போது முட்புதர்கள் உள்ளதால் இக்குழியின் அபாயம் புரியாமல் கால்நடைகள் மேய்கின்றன. இந்த கிணற்றை மூட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.இது குறித்து பொதுமக்கள்  கூறுகையில், எங்கள் பகுதியில் தோண்டப்பட்ட ஆழ்துளை கிணறு இதுவரை மூடாமல் உள்ளது. இந்த ஆழ்துளை கிணற்றை சுற்றிலும் பொது மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் உடனடியாக இதை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்

Tags : closure ,village ,
× RELATED இலவச வீட்டுமனை பட்டா வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை