×

ஓடையில் அமைத்த கரையில் விரிசல்

பண்ருட்டி, நவ. 1:  பண்ருட்டி அருகே விசூர் கிராமத்தில் கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது ஓடை பகுதியில் கரைகள் இல்லாமல் இருந்தது. இதன் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு உயிர்பலி நடந்தது. இதனால் புதிய கரைகள் அமைக்கும் பணி நடந்து வந்தது. தற்போது மழை காலம் என்பதால் கரை பகுதி முழுவதும் ஆங்காங்கே தரமற்ற வகையில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இவற்றை சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறையினர் சரிசெய்ய  வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர். இல்லையென்றால் தற்போது வடகிழக்கு பருவமழை அதிகளவு பெய்யும் நிலையில், கரைகள் உடைந்து தண்ணீர் ஊருக்குள் புகுந்து கடும் சேதத்தை ஏற்படுத்தும். எனவே சுமார் 300 மீட்டர் மேல் அமைத்துள்ள கரையில் ஏற்பட்டுள்ள  விரிசல்களை சரிசெய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், என எதிர்பார்க்கின்றனர்.

Tags : shore ,stream ,
× RELATED பெரம்பலூர் அருகே குன்னத்தில் ஆனைவாரி ஓடையில் கல்மர படிமம் கண்டுபிடிப்பு