×

போலீஸ் வேலைக்கான உடற்தகுதி தேர்வு

விழுப்புரம்,  நவ. 1: தமிழகத்தில் வரும் 6ம் தேதி போலீஸ் வேலைக்கான உடற்தகுதி தேர்வு  தொடங்குகிறது. விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் 5,785 பேர்  எழுதுகிறார்கள். ஐஜி சமுத்திரக்கனி தலைமையில் இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக   செய்யப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம்  2,465 இரண்டாம் நிலை காவலர்கள் (ஆயுதப்படை), 5,962 இரண்டாம் நிலை  காவலர்கள் (தமிழ்நாடு சிறப்புக்காவல் படை), 208 இரண்டாம் நிலை சிறை  காவலர்கள் மற்றும் 191 தீயணைப்போர்  பதவி என 8826 பணியிடங்கள். இது தவிர  மற்ற பணியிடங்கள் 62 என மொத்தம் 8888  பணியிடங்களை நிரப்புவதற்கான  அறிவிப்பை கடந்த மார்ச் 6ம் தேதி வெளியிடப்பட்டது. தொடர்ந்து இதற்கான  தேர்வு தமிழகம் முழுவதும் கடந்த  ஆகஸ்ட் 25ம் தேதி 32 மாவட்டங்களில் 228  மையங்களில் நடந்தது. சுமார் 3 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள்.   விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை 17, 114 ஆண்களும், 3,160 பெண்கள்  உள்ளிட்ட மொத்தம் 20,274 பேர் இத்தேர்வை எழுதினார்கள். எழுத்து தேர்வு  முடிவுகள் கடந்தமாதம் வெளியாகின. இதனிடையே எழுத்து தேர்வில்  வெற்றிபெற்றவர்களுக்கு தொடர்ந்து அடுத்த கட்டமாக உடல் தகுதி தேர்வு மற்றும்  உடல்திறன் தேர்வு வரும் 6ம் தேதி தமிழகம் முழுவதும் தொடங்குகிறது.

விழுப்புரம்,  கடலூர் இரு மாவட்டங்களிலும் தேர்வானவர்களுக்கு உடல்தகுதி தேர்வு  விழுப்புரம் கா.குப்பம் ஆயுதப்படை மைதானத்தில் நடக்கிறது. இதில்  விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 2,389 ஆண்களும், 913 பெண்கள் என மொத்தம்   3,503 பேருக்கும் உடல் தகுதித்தேர்வுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.  அதே  போல் கடலூர் மாவட்டத்தில் எழுத்து தேர்வில் வெற்றிபெற்ற 1,637 ஆண்கள், 645  பெண்கள் என மொத்தம் 2,282 பேருக்கு உடல்தகுதித்தேர்வில் பங்கேற்க அழைப்பு  விடுக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கு உடல் தகுதிதேர்வில் உயரம்,   மார்பளவு, 1,500 மீட்டர் ஓட்டம், சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை நடக்கிறது.  அதனைத்தொடர்ந்து உடல்திறன் தேர்வான ஓட்டம், கயிறு ஏறுதல், நீளம் அல்லது  உயரம் தாண்டுதல் போன்றபோட்டிகளும் நடக்கிறது.  அதே போல் பெண்
களுக்கு உயரம்,  ஓட்டப் போட்டிகளும் இதில் வெற்றிபெறுபவர்களுக்கு உடல்திறன்போட்டியான  ஓட்டம், குண்டு எறிதல், நீளம் அல்லது உயரம்தாண்டுதல் போட்டிகள் நடக்கிறது.  இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு ஊர்க்காவல்படை ஐஜி சமுத்திரக்கனி தலைமையில்  எஸ்பி ஜெயக்குமார் மற்றும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.


Tags :
× RELATED காவல்துறை பணிக்களுக்கு பிரெண்ட்ஸ்...