×

விவசாயிகள் கோரிக்கை சாலையில் கிடந்த ரூ.2 லட்சத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த கல்லூரி மாணவர்கள்

புதுக்கோட்டை, நவ.1: சாலையில் ஒரு பையில் கிடந்த ரூ.2 லட்சத்து 21 ஆயிரத்து 300 எடுத்து காவல்நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் ஒப்படைத்தனர். அவர்கள் மாவட்ட எஸ்பி செல்வராஜ் பாராட்டினார்.புதுக்கோட்டையில் உள்ள மன்னர் கல்லூரிக்கு முன்பு உள்ள வேகத்தடை அருகே நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணியளவில் சாம்பல் நிற துணிப்பை ஒன்று கிடந்தது. இதைக்கண்ட அந்த வழியாக மோட்டார் சைக்களில் சென்ற கல்லூரி மாணவர்கள் கலீப்நகர் 4-ம் வீதியை சேர்ந்த காஜா நிஜாமுதீன், முகமது இப்ராஹிம் ஆகியோர் அந்த பையை எடுத்து புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த போலீசார் அந்த பையை பிரித்து பார்த்ததில் அந்த பையில் ரூ.2 லட்சத்து 21 ஆயிரத்து 300 இருந்தது. இதைத்தொடர்ந்து இந்த பை குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இந்த பை புதுக்கோட்டையில் ஜவுளிக்கடை நடத்தி வரும் முபாரக் அலி என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நேற்று மாவட்ட போலீஸ் எஸ்பி செல்வராஜ் அந்த பணப்பையை முபாரக் அலியிடம் ஒப்படைத்தார். மேலும் பணப்பையை கண்டுபிடித்து கொடுத்த காஜா நிஜாமுதீன் மற்றும் முகமது இப்ராஹிம் ஆகிய 2 பேரையும் பாராட்டி நற்சான்றிதழ் மற்றும் பண வெகுமதியை போலீஸ் எஸ்பி செல்வராஜ் வழங்கினார்.


Tags : College students ,police station ,
× RELATED காவல் நிலையத்தில் வெள்ளம் புகுந்தது