×

ஆட்சியர், எஸ்பி அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி

விழுப்புரம், நவ. 1: விழுப்புரம் ஆட்சியர், எஸ்பி அலுவலகத்தில் உலக ஒற்றுமை தினநாள் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.சர்தார்  வல்லபாய்பட்டேல் பிறந்தநாளை தேசிய ஒற்றுமை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அதனைத்தொடர்ந்து அவரது பிறந்த நாளான நேற்று விழுப்புரம் ஆட்சியர்  அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி  எடுத்துக்கொள்ளப்பட்டது. மாவட்ட  கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயாபிசிங் தலைமையில் அனைத்து அரசுத்துறை அதிகாரிகள்,  ஊழியர்கள் இந்த உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். அப்போது ஆட்சியரின் நேர்முக  உதவியாளர்(பொது) பிரபாகர்,  ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(சட்டம்) தர்மதேவி,  செய்திமக்கள் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.  இதே போல் விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் சர்தார் வல்லபாய்பட்டேல்  பிறந்தநாளையொட்டி எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி  எடுத்துக்கொள்ளப்பட்டது. கூடுதல் எஸ்பி சரவணக்குமார், தனிப்பிரிவு   இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட குற்ற ஆவண காப்பக இன்ஸ்பெக்டர் பிரேமா  மற்றும் பலர் கலந்துகொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Tags : Office of the Collector ,SP ,
× RELATED காவலர் பணியிட மாறுதல்...