தடுப்புக்காவலில் ஒருவர் சிறையில் அடைப்பு

திண்டிவனம், நவ. 1: திண்டிவனம்  அருகே பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த நபரை பிரம்மதேசம்  போலீசார் தடுப்புக்காவலில் கைது செய்தனர். அவர் சிறையில்  அடைக்கப்பட்டுள்ளார். திண்டிவனம் அடுத்த டி நல்லாளம் கிராமம்,  தைலந்தோப்பு தெருவை சேர்ந்தவர் ராசய்யன் மகன் மகேந்திரன் (42). இவர் மீது  பிரம்மதேசம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.  மேலும் தொடர்ந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததால் விழுப்புரம்  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில், மாவட்ட  ஆட்சித் தலைவர் சுப்பிரமணியன் உத்தரவின்படி மகேந்திரனை தடுப்பு காவல்  சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags :
× RELATED மாவட்டம் முழுவதும் போலியோ தடுப்பு முகாம்