×

தொழிலாளி தற்கொலை

திருக்கோவிலூர், நவ. 1: திருக்கோவிலூர் அருகே ஒட்டம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் குப்பன் (45), தொழிலாளி. குடிப்பழக்கம் உடைய இவருக்கு கடந்த 2 வருடமாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று வயிற்று  வலி அதிகமானதால் மனமுடைந்த குப்பன் எலிமருந்தை எடுத்து சாப்பிட்டுள்ளார். பின்னர் வீட்டில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு கண்டாச்சிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ  கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குப்பன் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து அவரது மனைவி அஞ்சலை அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் பொன்னு ரங்கம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Worker suicide ,
× RELATED ஊரடங்கு நீட்டிப்பால் தொழிலாளி தற்கொலை