×

மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

விக்கிரவாண்டி, நவ. 1: விக்கிரவாண்டி அருகே உள்ள சாமிய குச்சிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (52). நேற்று அதிகாலை அவர் கிராமத்தில் வயல்வெளியில் பூமிநாதன் என்பவர் நிலத்து பகுதியில் நடந்து சென்று  கொண்டிருந்தார். அப்போது  அறுந்து கிடந்த மின்சார கம்பி மீது எதிர்பாராத விதமாக மிதித்துள்ளார். இதில்  அவர் மீது மின்சாரம் தாக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த அவரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு  முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது  வழியில் பரிதாபமாக இறந்தார்.  இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் வருவாய் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில்...