×

மாதாந்திர குறைதீர் கூட்டம்

புதுச்சேரி, நவ. 1:    தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் புதுச்சேரி மண்டல ஆணையர் தேவராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் நிதி ஆப்கே நிகட் என்ற  பெயரில் நவம்பர் மாத குறைதீர் கூட்டம் உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் தலைமையில் வருகிற 11ம் தேதி எண்.101, நூறடி சாலை, உழந்தை கீரப்பாளையம், முதலியார்பேட்டை, புதுச்சேரி - 605 004 என்ற முகவரியில் அமைந்துள்ள  வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் நடக்கிறது.  அதன்படி, 11ம் தேதி காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரை சந்தாதாரர்களுக்கும், மதியம் 2 மணி முதல் 3 மணி வரை தொழிலதிபர்களுக்கும், மாலை 3 மணி முதல் 4 மணி வரை குறைதீர் கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில்  வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைகளை தெரிவிக்க விரும்பும் உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் அதுகுறித்த விவரங்களுடன் தங்களது பெயர், தொழில் மையம், நிறுவன முகவரி, தொழிலாளர்  வருங்கால வைப்பு நிதி எண், யுஏஎன் எண், டெலிபோன் மற்றும் செல்போன் எண்கள் ஆகிய விவரங்களை வரும் 5ம் தேதிக்கு முன்னதாக அந்த அலுவலகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரிக்கு தெரியப்படுத்தவும். அல்லது  ro.puducherry@epfindia.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : grievance meeting ,
× RELATED காவல்துறை சார்பில் குறைதீர் கூட்டம்;...