×

தேசிய திறனறி முதல் நிலை தேர்வு

புதுச்சேரி, நவ. 1:    புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் குப்புசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலுள்ள பள்ளிகளில் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான தேசிய திறனறி முதல் நிலை தேர்வு  மற்றும் அரசு/ அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி தொகை தேர்வு ஆகியவை வரும் 3ம் தேதி பள்ளி கல்வி இயக்ககத்தால் நடத்தப்படவுள்ளது.  தேசிய திறனறி முதல் நிலை தேர்வுக்கு புதுச்சேரி - 4,345, காரைக்கால் - 1,502, மாகே - 223, ஏனாம் - 493 என மொத்தம் 6,563 மாணவ, மாணவிகளும், தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி தொகை தேர்வுக்கு புதுச்சேரி - 1,692,  காரைக்கால் - 733, மாகே - 83, ஏனாம் - 69 என மொத்தம் 2,577 மாணவ, மாணவிகளும் விண்ணப்பித்துள்ளனர்.  தேசிய திறனறி முதல் நிலை தேர்வு 19 மையங்களிலும், தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி தொகை தேர்வு 10 மையங்களிலும் நடைபெறவுள்ளது. புதுச்சேரி பள்ளி கல்வி துறையானது இத்தேர்வுகளை நடத்துவதற்கு விரிவான  ஏற்பாடுகளை செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Efficiency Test Examination ,
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...