×

ஆழ்துளை கிணற்றை மூடிய போலீசார்

புதுச்சேரி, நவ. 1:   திருக்கனூர் அருகே உள்ள குமராபாளையம் ஜேவிஆர் நகர் அருகில் பல வருடங்களாக பயன்பாட்டில் இல்லாத ஒரு ஆழ்துளை கிணறு திறந்த நிலையில் இருந்தது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்கள்  காட்டேரிக்குப்பம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு அப்பகுதியிலுள்ள தன்னார்வலர்களின் உதவியுடன் ஆழ்துளை  கிணற்றால் விபத்து ஏற்படாத வகையில் சிமெண்ட், செங்கல் மூலம் அடைத்தனர். இதனால் அப்பகுதி மக்கள் காட்டேரிக்குப்பம் போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.

Tags : well ,
× RELATED காவல் நிலையத்தில் வெள்ளம் புகுந்தது