நர்சிங் மாணவி திடீர் மாயம்

வில்லியனூர், நவ. 1:  வில்லியனூர் அருகே தொண்டமாநத்தம் மேட்டு தெருவை சேர்ந்தவர் சகாயராஜ். இவரது 17 வயது மகள், டிப்ளமோ நர்சிங் முதலாமாண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை இவர், பயிற்சிக்காக நெல்லித் ேதாப்பு சென்றுள்ளார். பின்னர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

Tags : Nursing student ,
× RELATED தென்தாமரைகுளத்தில் நர்சிங் மாணவி மாயம்