×

தூர்வாரப்பட்ட குளங்களை முதல்வர் நாராயணசாமி ஆய்வு

காரைக்கால், நவ. 1:  காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் நம் நீர்  திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் உள்ள சுமார் 150க்கும் மேற்பட்ட குளங்கள், வடிகால் வாய்க்கால்களை, பல்வேறு அரசுத்துறைகள், தனியார் தொழிற்சாலைகள், பள்ளி,  கல்லூரிகள்  தங்களது சொந்த நிதி மற்றும் முயற்சியால் தூர்வாரும் பணிகளை மேற்கொண்டனர் . இதன் மூலம் தூர்வாரப்பட்ட பல்வேறு குளங்களை முதல்வர் நாராயணசாமி நேற்று காரைக்கால் திருமலைராயன்பட்டினம் திருநள்ளாறு தொகுதிகளில் பார்வையிட்டு கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளை பாராட்டியதோடு, குளத்தின் கரைகளில்  மரக்கன்றுகளை நட்டார்.இந்நிகழ்ச்சியில் வைத்திலிங்கம் எம்பி, அமைச்சர்கள் கமலக்கண்ணன்,  கந்தசாமி, கலெக்டர் விக்ராந்த் ராஜா எஸ்எஸ்பி மகேஷ்குமார் பன்வால், முன்னாள் எம்எல்ஏ மாரிமுத்து மற்றும் பல்வேறு அரசுத்துறை  அதிகாரிகள், காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்  காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் நம் நீர் திட்டத்தின்கீழ் தூர்வாரப்பட்டு குளங்களை பார்வையிட்டு மரக்கன்றுகள் நடுவதற்காக புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரி காமராஜர்  தொகுதி தேர்தல் நேரத்தில் வருகை தருவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் திடீரென அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அதே குளங்களை பார்வையிட்டு மரக்கன்றுகளை நட்டு இருப்பது  குறிப்பிடத்தக்கது.

Tags : inspection ,CM Narayanasamy ,
× RELATED பொதட்டூர்பேட்டையில் ஆய்வு அரசு...