×

வேலூர் மாநகராட்சியில் 10 நாட்களுக்குள் பழுதான போர்வெல்களை கணக்கெடுத்து மூடுவதற்கு பதிலாக சீரமைக்க வேண்டும்

வேலூர், நவ.1: ேவலூர் மாநகராட்சியில் 10 நாட்களுக்குள் பழுதான போர்வெல்களை கணக்கெடுத்து மூடுவதற்கு பதிலாக சீரமைக்கவேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் தெரிவித்தார்.வேலூர்  மாநகராட்சி 3வது மண்டல அலுவலகத்தில் போர்வெல்கள், மின்விளக்குகள் சீரமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் தலைமையில் நேற்று நடந்தது. மாநகராட்சி உதவி ஆணையர் பிரபு, சுகாதார  அலுவலர் முருகன், வருவாய் ஆய்வாளர் தனசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், எம்எல்ஏ நந்தகுமார் பேசியதாவது: திருச்சியில் சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியான சம்பவத்தை தொடர்ந்து திறந்த நிலை  ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டு வருகிறது. அதேபோல் அணைக்கட்டு தொகுதியில் 6 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் போர்வெல்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக பொதுமக்கள் வாட்ஸ் அப்களில் புகார் தெரிவித்த வண்ணம்  உள்ளனர். மேலும் மின்மோட்டார் பழுதை சரிசெய்ய கழற்றி சென்று மீண்டும் மின்மோட்டார் பொருத்தாமலும், பைப்கள் உடைந்தும் உள்ளது. இதுபோன்ற சுமார் 50க்கும் மேற்பட்ட இடங்களில் போர்வெல்கள் பழுதாகி உள்ளது.

இந்த போர்வெல்களை மூடுவதற்கு பதிலாக சீரமைக்க வேண்டும். போர்வெல்களை மூடிவிட்டால் கோடைகாலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். போர்வெல்கள் சீரமைக்க குறைந்த அளவிலான தொகைதான் செலவாகும். எனவே மாநகராட்சி  அதிகாரிகள் 10 நாட்களுக்குள் போர்வெல்களை சீரமைக்க வேண்டும். மேலும், மாநகராட்சிக்குள் வரும் அரியூர், சித்தேரி, பாகாயம், பலவன்சாத்து உள்ளிட்ட பகுதிகளில் மின்விளக்குகள் எரியாமல் உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. எனவே  மின்விளக்குகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். இல்லாவிட்டால் மின்கம்பங்களில் தீப்பந்தம் கட்டுவேன். பயன்படுத்தவே முடியாது என்ற நிலையில் திறந்து கிடக்கும் போர்வெல்களை மட்டும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக பம்ப் ஆபரேட்டர்களிடம் சம்பளம் சரிவர வழங்கப்படுகிறதா? என்று கேட்டார். பின்னர் பம்ப் ஆபரேட்டர்கள் ஒவ்வொருவரிடமும் அவர்கள் பகுதியில் உள்ள பழுதான போர்வெல்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும் தற்போது  மழைக்காலம் என்பதால் பம்ப் ஆபரேட்டர்களுக்கு தனது செலவில் மழை கோர்ட் வாங்கித்தருவதாக கூறினார்

Tags : Vellore Corporation ,
× RELATED 2012ம் ஆண்டுக்கு பின்னர் தோன்றிய...