×

சோளிங்கர் அருகே பைக் மோதி தொழிலாளி பலி உறவினர்கள் மறியல் முயற்சி

சோளிங்கர், நவ.1: சோளிங்கர் அருகே பைக் மோதியதில் கூலித்தொழிலாளி இறந்தார். விபத்து ஏற்படுத்தியவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சோளிங்கர் அடுத்த பாணாவரம்  அருகே உள்ள குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர் கொல்லாபுரி(56), கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு அதேபகுதியில் உள்ள ஒரு கடைக்கு நடந்து சென்றார். அப்போது, அவ்வழியாக வந்த பைக், இவர் மோதியது. இதில்  படுகாயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு, அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கொல்லாபுரி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து, பாணாவரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.

இந்நிலையில், விபத்து ஏற்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி கொல்லாபுரியின் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று காலை குன்னத்தூர் பொன்னியம்மன் கோயில் அருகே சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
தகவலறிந்த பாணாவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விபத்து ஏற்படுத்தியவர்களை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதையேற்று  அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : Relatives ,bike collision worker ,Sholingar ,
× RELATED குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது...