×

லஞ்ச ஒழிப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு குடியாத்தம் நடுப்பேட்டையில்

குடியாத்தம், நவ.1: குடியாத்தம் நடுப்பேட்டையில் லஞ்ச ஒழிப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. குடியாத்தம் நடுப்பேட்டையில் உள்ள அரசு நிதிஉதவி மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி  அதிகாரிகள் லஞ்ச ஒழிப்பு குறித்து நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். அப்போது, லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம் என்று மாணவர்களுக்கு விளக்கினர். மேலும் பள்ளியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்,  ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் லஞ்சம் கொடுக்க மற்றும் பெற மாட்டோம் என்று உறுதிமொழி ஏற்றனர்.

Tags :
× RELATED தமிழகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது: நீதிபதி புகழேந்தி வேதனை