×

வீடு இடிந்தது

கன்னியாகுமரி: கொட்டாரம், நரிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சிங் (53). இவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இது தவிர மெட்ரிக்குலேசன் பள்ளியும் நடத்தி வருகிறார். அதிமுகவில் மாவட்ட நிர்வாகியாகவும் உள்ளார். 2 குழந்தைகள் உள்ளனர். இவருக்கு சொந்தமான பண்ணை வீடு நரிக்குளத்தில் உள்ளது. பண்டிகை காலங்கள், விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்து தங்கிவிட்டு செல்வது வழக்கம். அதன்படி தீபாவளி பண்டிகையையொட்டி குடும்பத்தினருடன் 2 நாட்களுக்கு முன்புதான் வந்து வீட்டில் தங்கிவிட்டு திரும்பினார். இந்தநிலையில் நேற்று அந்த பகுதியில் கனமழை பெய்தது. இதில் சிங்கின் தோட்டத்தில் உள்ள வீடு திடீரென இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டது.

Tags : house ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்