×

என்.ஜி.ஓ. காலனி அருகே விபத்தில் சிக்கியவரின் 5 பவுன் செயின் மாயம்

நாகர்கோவில், அக்.31: சுசீந்திரம் அருகே உள்ள மணிக்கட்டி பொட்டல் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (51). சம்பவத்தன்று இவர், என்.ஜி.ஓ. காலனி  அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த பைக் அவர் மோதி மோதியது. இதில் சந்திரசேகர், சுய நினைவு இழந்தார். அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின், சுய நினைவு வந்த சந்திரசேகர் தனது கழுத்தை பார்த்த போது, அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயின் மாயமாகி இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி அவர் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காணாமல் போன செயின் மதிப்பு ரூ.75 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

Tags : Bound St. Magic of the Accident ,
× RELATED உதிரமாடன்குடியிருப்பில் டிச.5ல் முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம்