×

நாங்குநேரியில் தொடர் கனமழை மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

நாங்குநேரி அக்.31: நாங்குநேரி பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. மழையால் மரம் சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாங்குநேரி பகுதியில் கடந்த இரு வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.  இந்த கனமழையால் நாங்குநேரி இசக்கியம்மன் கோவில் பாலத்திலிருந்து ஊருக்குள் செல்லும் முக்கிய சாலையில் நின்ற ஆலமரம் சரிந்து விழுந்தது. இதனால் அந்த வழியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  தகவலறிந்து நாங்குநேரி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையிலான குழுவினர் விரைந்து வந்து சாலையில் கிடந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர் அதன்பின் போக்குவரத்து சீரானது. அடைமழை காரணமாக பொது மக்கள் எங்கும் செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கி கிடந்தனர். தொடர் மழையால் பாசன குளங்களுக்கு தண்ணீர் வரத்துவங்கியுள்ளது. விவசாயிகள் நெல் பயிரிடுவதற்காக நாற்றாங்கால் அமைக்கும் பணியினை மேற்கொண்டுள்ளனர்.

சாலையில் தேங்கி நிற்கும் மழை நீர் நாங்குநேரி பகுதியில்  பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது போதிய பராமரிப்பு  இல்லாததால் சாலையோரங்களில் மண்மேடுகள் காணப்படுகின்றன இதனால் மழை நீர்  வெளியேற முடியாமல் சாலையிலேயே தேங்கி நிற்கிறது. இந்த பள்ளங்களில்  வாகனங்கள் சிக்கிக் கொள்வதால் விபத்து ஏற்படுகிறது. மேலும்  தண்ணீர் சில  நாட்கள் தேங்கி நிற்பதால் வாகனங்கள் அடிக்கடி சென்று பள்ளம் பெரிதாகி சாலை  பாதிப்படைகிறது. எனவே நாங்குநேரி பகுதியில் சாலைகளில் தேங்கி நிற்கும்  தண்ணீரை அகற்ற நெடுஞ்சாலைத்துறை முன்வர வேண்டும் என வாகன ஓட்டிகள்  வலியுறுத்தியுள்ளனர்.

Tags :
× RELATED மனைவியை தாக்கிய கணவர் கைது